2024 மே 01, புதன்கிழமை

உதைபந்தாட்ட தொடர் ; சம்பியனானது யுனைட்டட்

Janu   / 2024 ஏப்ரல் 17 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி பேர்ல்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு அணிக்கு 07 பேர் கொண்ட கற்பிட்டி உதைபந்தாட்ட லீக்- 2024 தொடர் கடந்த 13 ஆம் 14 ஆம். திகதிகளில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கற்பிட்டி நகரில் உள்ள உதைபந்தாட்ட வீரர்கள் ஏலத்தின் அடிப்படையில் பேர்ல்ஸ் , யுனைட்டட் , ப்ளஸி கைஸ் , வெஸ்ட் ட்ரைகர்ஸ் , லேகர்ஸ் மற்றும் ஹைபர் வேல்ஸ் ஆகிய ஆறு அணிகளுக்கு  வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்படி இறுதிப் போட்டிக்கு கற்பிட்டி பேர்ல்ஸ் அணியும் யுனைட்டட் அணியும் தகுதி பெற்றது.  மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெற்றுக் கொள்ளாமல் போட்டி சமநிலையில் முடிவுக்கு வந்தது. 

இதனையடுத்து நடப்பாண்டின் சம்பியனைத் தீர்மாணிக்க பெனால்டி உதை  அணிகளுக்கும் வழங்கப்பட்டது. 

இதில் யுனைட்டட் அணியின் கோல் காப்பாளர் பர்ஹான் எதிரணியின் இரு கோல்களை தடுத்ததன் காரணமாக யுனைட்டட் அணி 6:5 என்ற பெனால்டி கோல்கள் அடிப்படையில் சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது.

சம்பியனான யுனைட்டட் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 50,000 ரூபாய் பணமும் இரண்டாம் இடம் பெற்ற பேர்ல்ஸ் அணிக்கு கிண்ணமும் 25,000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டது. 

அத்துடன் தொடரின் சிறந்த கோல் காப்பாளராக யுனைட்டட் அணியின் பர்ஹான், சிறந்த வீரராக ஹைபர் வேல்ஸ் அணியின் அஹதீர், சிறந்த இளம் வீரராக பேர்ல்ஸ் அணியின் ஹிசாம் தெரிவானார்கள்.

இத்தொடரில் அதிக கோல்கள் செலுத்தி இவ்வாண்டின் தங்கக் காலணி விருதை பேர்ல்ஸ் அணியின் ஜாஹித் தன்வசப்படுத்தினார்.  

எம்.யூ.எம்.சனூன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .