Gopikrishna Kanagalingam / 2015 டிசெம்பர் 09 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

- பேரின்பராஜா சபேஷ்
விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறைத் திணைக்களம் இணைந்து நடாத்தும் 41ஆவது தேசிய விளையாட்டு விழாவில், பெண்களுக்கான எல்லே போட்டியில் கிழக்கு மாகாணம் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளது.
குளியாப்பிட்டி மைதானத்தில் மூன்றாம் இடத்துக்காக, கிழக்கு மற்றும் ஊவா மகாணங்களுக்கிடையிலான நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஊவா அணி 40 பந்துகளில் 5 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி 21 பந்துகளை மாத்திரம் எதிர் கொண்டு 6 ஓட்டங்களைப் பெற்று, வெற்றிபெற்றுள்ளது.
கிழக்கு மாகாணம் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவின் பெண்கள் எல்லே அணி பங்குபற்றி, முதற்தடவையாக பதக்கம் பெற்றுள்ளதாக, விளையாட்டு உத்தியோகத்தர் அப்புத்துரை சிவகுமார் தெரிவித்தார்.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago