Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவட்ட விளையாட்டு விழாவில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம் 152 புள்ளிகள் பெற்று முதலாவது இடத்தையும் 122 புள்ளிகள் பெற்று மண்முனை வடக்கு இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் பாட்டாளிபுரம் மைதானத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (19) மாலை நடைபெற்ற இறுதிப் போட்டிகளின் அடிப்படையில் இந்த இந்த இடங்களை இவ்வணிகள் பெற்றுக்கொண்டன.
மாவட்ட ரீதியான விளையாட்டுப் போட்டிகளில் 38 புள்ளிகளைப் பெற்று கோரளைப்பற்று தெற்கு, மண்முனை மேற்கு, மண்முனைப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள், 3ஆம் இடத்தைப் பெற்றன.
இப்போட்டிகளில் கால்பந்தாட்டம், கிரிக்கெட், எல்லே, கபடி, கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், கராத்தே, மேசைப்பந்து, பூப்பந்து, ஹொக்கி, தடகளப் போட்டிகள் ஆகியவற்றுடன் தேசிய ரீதியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கயிறு இழுத்தல் உள்ளிட்ட பொட்டிகள் நடத்தப்பட்டன.
கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களப் பணிப்பாளர் என் மதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்..சார்ள்ஸ், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
விசேட அதிதிகளாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி மற்றும் உதவிப்பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago