Mithuna / 2024 பெப்ரவரி 05 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியின் நேற்றைய நான்காம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த ஆப்கானிஸ்தான், கசுன் ராஜித, பிரபாத் ஜெயசூரிய, அசித பெர்ணாண்டோவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 296 ஓட்டங்களையே பெற்றது. இப்ராஹிம் ஸட்ரான் 114, ரஹ்மத் ஷா 54, நூர் அலி ஸட்ரான் 47, நசீர் ஜமால் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூரிய 5, அசித பெர்ணாண்டோ 3, கசுன் ராஜித 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 56 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக பிரபாத் ஜெயசூரிய தெரிவானார்.
6 hours ago
8 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 Nov 2025