2025 மே 01, வியாழக்கிழமை

ஓ.ஜீ இறுதிப் போட்டிக்கு தகுதி

Freelancer   / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

காத்தான்குடி விளையாட்டுக்கழகம் நடாத்தும் மர்ஹும் அப்துல் ஜவாத் ஞாபகார்த்த கிரிக்கட் சுற்றுப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் மட்டக்களப்பு சென்றல் லைட் விளையாட்டுக்கழகத்தை காத்தான்குடி விளையாட்டு மைதானத்தில் எதிர்த்தாடிய சாய்ந்தமருது ஓ.ஜீ.விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. 

முதலில் துடுப்படுத்தாடிய சாய்ந்தமருது ஓ.ஜீ.விளையாட்டுக்கழகம் 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது. 

பதிலுக்கு துடுப்படுத்தாடிய மட்டக்களப்பு  சென்றல் லைட் விளையாட்டுக்கழகம் 7.3 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களை பெற்ற நிலையில் மழை குறுக்கிட்டதால்  மத்தியஸ்தர்களின் தீர்ப்பீன் படி DLS முறையில் சாய்ந்தமருது ஓ.ஜீ.விளையாட்டுக்கழகம் 13 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதாக அறிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .