2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

கொத்தாந்தீவில் அறிமுக சிநேகபூர்வமான கால்பந்தாட்டம்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 07 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

முந்தல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொத்தாந்தீவு பிரதேசத்தில் கால்பந்தாட்ட  துறையை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான சிநேகபூர்வமான கால்ப்பந்தாட்ட போட்டி ஒன்று, கொத்தாந்தீவு அரசினர் முஸ்லிம் பாடசாலை மைதானத்தில், கடந்த வாரயிறுதியில் நடைபெற்றது.

முந்தல் பிரதேச செயலக பிரிவில், புழுதிவயல் தொடக்கம் உடப்பு வரைக்குமான பிரதேசங்களில் இளைஞர்களும், முதியோர்களும் அதிகமாக ஆர்வம் காட்டும் விளையாட்டாக கரப்பந்தாட்டமே கருதப்பட்டு வருகிறது. இந்நிலையை மாற்றி அமைத்து கால்பந்தாட்டத்திலும் இளைஞர்களை உள்வாங்கும் நோக்கில் அவர்களை கவரும் விதத்தில் இந்த கால்பந்தாட்ட போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அணிக்கு ஒன்பது பேர்களை கொண்ட இந்த அறிமுக சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில், கொத்தாந்தீவு கால்பந்தாட்டக் கழகமும், புத்தளம் நகரின் பிரபலமான போல்டன் கால்பந்தாட்ட கழகமும் போட்டியிட்டன.

முதலாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோலினை பெற்றிருந்தன. எனினும் இரண்டாவது பாதியில் கத்துக்குட்டியான  கொத்தாந்தீவு கால்பந்தாட்ட  அணி மேற்கொண்ட அதிரடியான ஆட்டத்தின் மூலமாக போட்டி நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் கொத்தாந்தீவு கால்பந்தாட்ட  அணியானது 5-2 கோல்களினால் வெற்றி பெற்றது.

கொத்தாந்தீவு கால்பந்தாட்ட  அணி சார்பாக எம். நஸ்மீர் மூன்று கோல்களையும்,  எம். நவீத் இரண்டு கோல்களையும் புகுத்தினர். இந்த போட்டிக்கு பிரதம நடுவராக புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கின் மத்தியஸ்தர் குழாமை சேர்ந்த எம். சர்ஜூன் கடமையாற்றினார்.

கொத்தாந்தீவு கால்ப்பந்தாட்ட  அணிக்கு பிரதான பயிற்றுவிப்பாளராக ஓய்வு பெற்ற புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை விளையாட்டு பொறுப்பாசிரியர் எம்.எம். முபாரக் கடமையாற்றி வருகிறார். அவரது வழிகாட்டலின் மூலமாகவே கொத்தாந்தீவு பிரதேசத்தில் கால்ப்பந்தாட்டம் மேலோங்கப்பட்டு வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X