Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 நவம்பர் 08 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை திருக்கோவில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு கழத்தின் 38ஆவது ஆண்டு நிறைவையொட்டி, மிகப்பிரமாண்டமாக நடாத்தப்பட்ட கிரிக்கெட், கால்பந்தாட்டம், கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளுக்கான இறுதிப் போட்டிகள், மின்னொளி விளையாட்டுத் திடலில், அக்கழகத்தின் தலைவர் து.சுரேந்திரன் தலைமையில் கடந்த வாரயிறுதியில் இடம்பெற்றது.
இதன்போது, கால்பந்தாட்டம்,கரப்பந்தாட்டம் ஆகிய போட்டிகளில், விநாயகபுரம் மின்னொளி அணி சம்பியனாக தெரிவானதுடன், கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், திருக்கோவில் உதயசூரியன் அணி சம்பியனாக தெரிவாகியது.
இச்சுற்றுபோட்டிகள், கடந்த மாதம் ஏழாம் திகதி ஆரம்பமாகி, தொடர்ந்து போட்டிகள் இடம்பெற்று வந்ததுடன், இச்சுற்றுப் போட்டிகளில், இன ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில், அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் சிங்கள், முஸ்லிம் விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றி இருந்தன.
அந்தவகையில், அமரர் காளிகுட்டி அழகையா ஞாபகார்த்த, அணிக்கு ஏழு பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், 44 கழகங்கள் பங்குகொண்டதுடன், அமரர் நடராஜா நாகராஜா ஞாபகார்த்த கால்பந்து சுற்றுப் போட்டிகளில் 33 கழகங்கள் பங்குகொண்டதுடன், அமரர் செல்லையா கந்துமணி ஞாபகார்த்த கரப்பந்து சுற்றுப் போட்டிகளில் 26 கழகங்கள் பங்குகொண்டு இருந்தன.
இந்நிலையிலேயே, கடந்த வாரயிறுதியில் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன. இதில், திருக்கோவில் உதயசூரியன் கிரிக்கெட் அணிக்கும் திருக்கோவில் சுப்பர்ஸ்டார் கிரிக்கெட் அணிக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில், திருக்கோவில் சுப்பர்ஸ்டார் அணியை விழ்த்திய திருக்கோவில் உதயசூரியன் அணி, அமரர் காளிகுட்டி அழகையா ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தினையும் 15,000 ரூபாய் பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்டனர்.
இதேவேளை, கால்பந்தாட்ட கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், திருக்கோவில் கதிரவன் கால்பந்தாட்ட அணியும் விநாயகபுரம் மின்னொளி கால்பந்தாட்ட அணியும் மோதின. விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்விறுதிப் போட்டியில், 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற விநாயகபுரம் மின்னொளி கால்பந்து அணி வெற்றிபெற்று அமரர் நடராஜா நாகராஜா ஞாபகார்த்த கால்பந்தாட்ட அணி, வெற்றிக் கிண்ணத்தையும் 12,000 ரூபாய் பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்டது.
இது தவிர, ஆலையடிவேம்பு உதயம் கரப்பந்தாட்ட அணிக்கும் விநாயகபுரம் மின்னொளி கரப்பந்தாட்ட அணிக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில், வெற்றிபெற்ற விநாயகபுரம் கரப்பந்தாட்ட அணி, வெற்றிக் கிண்ணத்தையும் 5,000 ரூபாய் பணப்பரிசையும் தட்டிச் சென்றது.
திருக்கோவில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்தின் இறுதிப் போட்டிகள் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற அணிகள், தொடர் நாயகன் ஆகியோர்களுக்கான வெற்றிகிண்ணங்களையும் பணப்பரிசில்களையும் வழங்கி வைத்ததுடன், அரசியல் பிரமுகர்கள்,அரச அதிகாரிகள், அனுசரணையாளர்கள்,மின்னொளி கழக நிர்வாகிகள் மற்றும் சமூக தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு கிண்ணங்களையும் பணப்பரிசில்களையும் வழங்கி வைத்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago