2025 ஜூலை 05, சனிக்கிழமை

கிழக்கிற்கு பெண்கள் பிரிவில் தங்கம்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில், பெண்கள் பிரிவில் கிழக்கு மாகாணத்திற்கு தங்கப்பதக்கமும், ஆண்கள் பிரிவில் வெண்கலப்பதக்கமும் கிடைத்துள்ளது. 

 மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இடம்பெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஒரு அங்கமான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இலங்கையின் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி  ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் போட்டிகளில் பங்குபற்றின.

இதில்,பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டிக்கு சப்ரகமுவ மாகாணமும், கிழக்கு மாகாணமும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சப்ரகமுவ மாகாண அணியினர், ஐந்து ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 18 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணியினர் 2.4 ஓவர்களில், இரண்டு விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றனர். இதன் மூலம் தங்கப்பதக்கத்தை கிழக்கு மாகாண பெண்கள் கிரிக்கட் அணி பெற்றுக்கொண்டது.

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டில் பெண்களின் ஆற்றல் வெளிப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்தில், கிழக்கு மாகாண பெண்கள் அணி தேசிய சம்பியன் பட்டத்தைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, ஆண்கள் பிரிவு கிரிக்கெட்டில், அரையிறுதிப் போட்டியில், மேல் மாகாண அணியுடன் தோல்வியடைந்த கிழக்கு மாகாண அணி, மூன்றாமிடத்திற்கான போட்டியில் வடமேல் மாகாண அணியுடன் கலந்து கொண்டது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி 15 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய வடமேல் மாகாண அணி 15 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கட்டுக்களை இழந்து  104 ஓட்டங்களைப் பெற்றது. இதன் மூலம் கிழக்கு மாகாண அணி, ஐந்து ஓட்டங்களினால் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை சுவிகரித்துக் கொண்டது.

விளைளயாட்டுத்துறையில் போதிய வசதி வாய்ப்புக்கள் இல்லாதநிலையிலும் கிழக்கு மாகாணம் இன்று தேசிய ரீதியில் முன்னேற்றம் அடைந்து வருவது பாராட்டத்தக்கதாகும். வீரா்களின் அபார திறமையும், பயிற்றுவிப்பாளர்களின் வழிநடத்தலும் இன்று கிழக்கு மண்ணை முதல் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .