மொஹொமட் ஆஸிக் / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}


கண்டி மாவட்ட கால்பந்தாட்டச் சங்கம் ஒழுங்கு செய்த, கண்டி மாவட்ட கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் ஏ பிரிவில் சம்பியனாக, கண்டி கோல்டன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் தெரிவானதுடன், இரண்டாம் இடத்தை, கண்டி ஹைலைன் விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டது.
கண்டி போகம்பறை மைதானத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில், முதற்பாதி முடிவடையும் போது, கோல்டன் ஸ்டார் விளையாட்டுக் கழக அணி, இரண்டு கோல்களைப் பெற்றுக் கொண்டதுடன், ஹைலைன் அணிக்கு, ஒரு கோலையும் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. போட்டியின் இரண்டாம் பகுதியின் இறுதி சில விநாடிகளில், ஒரு கோலை மட்டும் பெற்றுக் கொள்வதற்கு, ஹைலைன் அணிக்கு வாய்ப்புக் கிடைத்தது. இதனால், 2-1 என்ற கோல் கணக்கில், கண்டி கோல்டன் ஸ்டார் கழகம் வெற்றிபெற்று, சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டது.
இப் போட்டித் தொடரில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசில்களையும் கேடயங்களையும் வழங்கும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதிகளாக, மத்திய மாகாண விளையாட்டுத் துறை அமைச்சர் திலின பண்டார தென்னக்கோன், இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago