2025 ஜூலை 05, சனிக்கிழமை

கனிஷ்ட பகிரங்க கோல்ஃப் சம்பியன்ஷிப்

Gopikrishna Kanagalingam   / 2015 டிசெம்பர் 09 , பி.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சண்முகன் முருகவேல் 

இந்த வருடத்துக்கான இலங்கை கனிஷ்ட பகிரங்க கோல்ஃப் சம்பியன்ஷிப், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15) முதல் வியாழக்கிழமை (17) வரை, றோயல் கொழும்பு கோல்ஃப் கழகத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கை கோல்ஃப் சங்கத்தால் நடாத்தப்படும் இத்தொடருக்கு, பிறிமா சண்றைஸ் பாண், தொடர்ச்சியாக எட்டாவது வருடமாகவும் அனுசரணை வழங்குகிறது. 

இந்தத் தொடருக்கு கண்டி, நுவரெலியா, கொழும்பிலிருந்து, எழுபதுக்கு மேற்பட்ட கனிஷ்ட கோல்ஃப்  வீரர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் பதினெட்டு வயதுக்குட்பட்ட, ஆண், பெண் இருபாலாரும் பங்கேற்கலாம். 

இந்தத் தொடரின் கடந்தகால சம்பியன்களான நந்தசேன பெரேரா, மிதுன் பெரேரா, லலித் குமார, அநுர ரோஹண ஆகியோர் தொழில்முறை வீரர்களாக மாறியிருந்ததோடு, பினுப விஜேசிங்க, அலயின் கி, ரணில் பீரிஸ், ருஷி கப்டன் ஆகியோர், இலங்கையின் சிறந்த கோல்ஃப் வீரர்களாக மாறியிருந்தனர். 

இந்தத் தொடரானது நான்கு வயதுப் பிரிவுகளிலில் இடம்பெறவுள்ளதோடு, சம்பியன்ஷிப்பில் எந்த வயதுப் பிரிவு வீரரும் கலந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பதினைந்து தொடக்கம் பதினேழு வயதுடையோர், தங்கப் பிரிவாகவும் பன்னிரண்டு தொடக்கம் பதினான்கு வயதுடையோர், வெள்ளிப் பிரிவாகவும் பத்து தொடக்கம் பதினொரு வயதுடையோர் வெண்கலப் பிரிவாகவும் ஒன்பது மற்றும் அந்த வயதுக்குக் கீழானோர் இரும்புப் பிரிவிலுமாக, போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

இந்தத் தொடருக்கான பிரதான அனுசரணையாளர்களான பிறிமா சண்றைஸ் ஆனது, இந்தத் தொடரில் பங்குபற்றும் வீரர்களுக்கான ஊட்டச்சத்துக்களை வழங்கவுள்ளது. இந்தத் தொடருக்கான பிரதான அனுசரணையாளர் காசோலையை, இலங்கை பிறிமா குழுமத்தின் இலங்கை விவசாய தொழிற்துறைகளின் பொது முகாமையாளர் ஷுன்தியன் ஷிங், இலங்கை கோல்ஃப்; சங்கத்தினதும் றோயல் கொழும்பு கோல்ஃப் கழத்தின் பிரதிநிதியான ரணில் பீரிஸிடம் கையளித்தார். 

இந்தத் தொடரின் கடந்த வருட வெற்றியாளர், பதினெட்டு வயதான லமிந்து ரைனிகா ஆவார். அவர், இந்த வருடம் வயதெல்லையை தாண்டியமையால் இந்த வருட தொடரில் பங்கேற்கமுடியாது. எனினும் ஆர்மண்ட் பிளேமர் கல்டெரா, எஸ்.பிளமின், புத்திக அயலத், டி.ஆகாஷ், எஸ். கைலாஸ், பிரஷாந் பீரிஸ் போன்றோர் தமது திறமைகளை வெளிப்படுத்தக் காத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .