குணசேகரன் சுரேன் / 2017 ஜூன் 08 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 98ஆவது ஆண்டு நிறைவையொட்டி, “வடக்கின் வல்லரசன் யார்?” என்னும் மாபெரும் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியொன்று, அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில், நாளை மறுதினம் (10), அதற்கு மறு நாள்(11) நடத்தப்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கார்த்திகேசு குணரத்தினத்தின் ஆதரவில், மூன்றாவது தடவையாக இச்சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட எட்டு அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றுகின்றன. முதலாவது போட்டியில், சிங்க றெஜிமன்ட் இராணுவ அணியை எதிர்த்து கொடிகாமம் இராணுவ அணி மோதுகிறது. இரண்டாவது போட்டியில், மன்னார் மாவட்ட அணியை எதிர்த்து கிளிநொச்சி மாவட்ட அணி மோதுகிறது. மூன்றாவது போட்டியில், ஆவரங்கால் மத்திய அணியை எதிர்த்து ஆவரங்கால் இந்து இளைஞர் அணியும், நான்காவது போட்டியில், புத்தூர் கலைமதி அணியை எதிர்த்து இளவாலை மத்திய அணியும் மோதவுள்ளன.
வெற்றிபெறும் அணிகள் தொடர்ந்து அரையிறுதிப் போட்டிகளில் விளையாடும். அரையிறுதிப் போட்டிகளில், வெற்றிபெறும் அணிகள், இறுதிப் போட்டியில் மோதும்.
இச்சுற்றுப் போட்டி, 2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றுப் போட்டியில், அநுராதபுரம் இராணுவ அணி சம்பியனாகியது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றுப் போட்டியில், ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சம்பியனாகியது.
21 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
5 hours ago