2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

கல்முனை கிரிக்கெட்டில் வெற்றிபெற்றது லெஜென்ட்ஸ் வி.க

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கடினப்பந்து கிரிக்கெட் போட்டியில், கல்முனை லெஜென்ட்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியுள்ளது.

இப்போட்டியில் சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக் கழகமும் கல்முனை லெஜென்ட்ஸ் விளையாட்டுக் கழகமும் பங்கேற்றிருந்தன.

இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது டஸ்கர்ஸ் அணி, 20 ஓவர்களின் முடிவில் 109 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுபெடுத்தாடிய கல்முனை லெஜென்ட்ஸ் அணி, 18.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து, வெற்றியிலக்கை அடைந்தது.

போட்டியின் நாயகனாக, கல்முனை லெஜென்ட்ஸ் அணியின் எம்.எம்.மானாசிர் தெரிவானார்.

லெஜென்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 150ஆவது போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டி நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டும், கௌரவ அதிதியாக மாகாண சபை உறுப்பினர் அப்துர் ரஸ்ஸாக் ஜவாத்தும் கலந்துகொண்டு, வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X