2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 16 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

சிறுவர்களின் உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலும் சிறுவர்களை வலுவூட்டும் வகையிலும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், யுனிசெப் அனுசரணையில் கல்முனை வலய கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட ஐந்து பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வானது கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி தலைமையில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.கே காமிலா ஏற்பாட்டில் பிரதேச செயலக கூட்டம் மண்டபத்தில் நடைபெற்ற பிரதேச மட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு (தேசிய பாடசாலை) பூப்பந்தாட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதுடன் நடைபெற்றது.

மேலும் மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி, அல்-மனார் மத்தியகல்லூரி, நற்பிட்டி முனை லாபீர் வித்தியாலயம், கல்முனை அல்-மிஸ்பா மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X