Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 30 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கின் பழம்பெரும் கழகமாம் காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமானது, கழகத் தலைமையகத்தில் கழகத் தலைவர் கி. சசிகரபவான் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
அதிதிகளாக, கழகப் போசகர்களான உத்தரவு பெற்ற நில அளவையாளர் வே. இராஜேந்திரன், உதவிக் கல்விப்ணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் மாலை சூட்டி வரவேற்கப்பட்டனர்.
கழகச் செயலாளர் வெ. உதயகுமரன் ஆண்டறிக்கையை சமர்ப்பிக்க, நிதிச் செயலாளர் என். சுபதீபன் கடந்தகால நிதி அறிக்கையை சமர்ப்பித்தார்.
இதன்போது 2022ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது. புதிய தலைவராக வெ. அருட்குமரன், செயலாளராக எஸ். கிருஷாந்த், பொருளாளராக எ. பிரேமானந்த் உள்ளிட்ட புதிய நிர்வாகம் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டது.
9 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Nov 2025