Mayu / 2023 டிசெம்பர் 10 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
வாழைச்சேனை, காவத்தமுனை மில்லத் விளையாட்டுக்கழகத்திற்கும், அர் ரஸாத் விளையாட்டுக் கழகத்திற்குமிடையிலான சினேகபூர்வ 20 ற்கு 20 கிரிக்கெட் போட்டியில் காவத்தைமுனை மில்லத் விளையாட்டுக்கழகம் 5 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.
ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய அர் ரஸாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய காவத்தைமுனை மில்லத் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அர் ரஸாத் அணி சார்பில் சர்ஜூன் 40 ஓட்டங்களைப் பெற்றார்.
ஆட்டநாயகனாக காவத்தமுனை மில்லத் விளையாட்டுக்கழக வீரர் எஸ்.எப். ஸியாம் தெரிவு செய்யப்பட்டார். இவர் 43 பந்து வீச்சுகளுக்கு முகம் கொடுத்து 62 ஓட்டங்களைப் பெற்றார்.

6 hours ago
8 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 Nov 2025