Editorial / 2024 ஜனவரி 08 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு ஆளுநரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வில் மற்றுமோர் அம்சமாக கிண்ணியாவில் 55 படகுகளுடன் 110 போட்டியாளர்கள் பங்கேற்ற படகோட்ட போட்டி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் வெங்கடேஸ்வரன் பங்கேற்றதுடன்,படகோட்ட போட்டியை ஆளுநர் செந்தில் தொண்டமான்,டாக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் பச்சை கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தனர்.

இப்போட்டியை பார்ப்பதற்கான ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் திரண்டு இருந்தனர்.
இப்போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக 100,000 ரூபாயும்,இரண்டாம் பரிசாக 50,000 ரூபாவும், மூன்றாம் பரிசாக 25,000 ரூபாயும் வழங்கி வைக்கப்பட்டது.
6 hours ago
8 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 Nov 2025