2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் புறக்கணிக்கப்பட்ட வீரன் தேசிய ரீதியில் பிரகாசிப்பு

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 02 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மு. தமிழ்ச்செல்வன்

தேசிய ரீதீயில் நடைபெற்ற பல்கலைகழகங்களுக்கு இடையிலான
கடற்கரை கரப்பந்தாட்டத்தில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர
பல்கலைகழகத்தை பிரதிநிதிபடுத்தும் போட்டியில் கிளிநொச்சி மலையாளபுரம் புதிய பாரதி விளையாட்டுக் கழக வீரனும், பல்கலைக்கழக மாணவனுமாகிய  நாகராசா நிசாந்தன் பங்குபற்றிய அணி 
இரண்டாமிடத்தினைப் பெற்றுள்ளது.

குழுநிலைப் போட்டிகளில்ல் மூன்று அணிகளை வீழ்த்தி குழு நிலையில் முதல் நிலை பெற்று, காலிறுதிப் போட்டியில் வயம்ப பல்கலைகழகத்தையும் அரையிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தையும் வீழ்த்தி,  இறுதி போட்டியில் சப்ரகமுவ பல்கலைகழகத்திடம் 1-1 என்ற செட் கணக்கில் சமநிலையில் வந்து இறுதி செட்டில் 14-13 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்து நிசாந்தன் பங்குபற்றிய அணி இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது.

நிசாந்தன் அங்கம் வகிக்கும் விளையாட்டுக் கழக கடற்கரை
கரப்பந்தாட்ட அணி கரைச்சி பிரதேச செயலக பிரிவு, கிளிநொச்சி மாவட்டம்,
வடக்கு மாகாண மட்டங்களில்  போட்டிகளில் பங்குகொண்டு வெற்றியீட்டி
இவ்வாண்டு ஜூன் மாதம் நீர்கொழும்பில் இடம்பெற்ற தேசிய போட்டிக்கு
செல்லவிருந்த நிலையில்,  மாவட்ட மட்டத்தில் உரிய அதிகாரிகளால்
அழைத்துச் செல்லப்படவில்லை.

எனவே ஏன் தேசிய போட்டிக்கு அழைத்துச் செல்லப்படவில்லை என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சிலரிடம் வினவிய போது நீர்கொழும்பில் மூன்று நாள்கள் தங்கியிருக்க வேண்டும். ஒரு நாள்தங்குமிட செலவு 8,500 ரூபாய்
தேவைப்படுகிறது. ஆனால் குறித்த நிதி வசதி ஏற்பாடு செய்து தரப்படவில்லை
இதன் காரணமாக தேசிய போட்டிக்கு வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட  இரண்டு வீரர்களை அழைத்துச் செல்லமுடியாதுபோய்விட்டது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .