Mithuna / 2023 டிசெம்பர் 18 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் கைப்பந்தாட்டத்தை பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரபல்யப் படுத்தும் வகையில் இலங்கை பாடசாலைகள் கைப்பந்தாட்ட சம்மேளனத்தால் 12 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலாருக்குமாக ஒழுங்கு செய்திருந்த போட்டி நிகழ்வில் கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி மாணவர் இடம்பெற்ற ஆறு போட்டிகளில் வெற்றியையும், இரண்டு போட்டிகளில் தோல்வியையும், ஒரு போட்டியில் வெற்றி தோல்வியற்ற நிலையையும் அடைந்தனர்.

ரிதிதென்ன இக்ரா வித்தியாலயம், வவுணத்தீவு பரமேஸ்வரா வித்தியாலயம், பூனொச்சிமுனை இக்ரா வித்தியாலயம், மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி, நாவற்காடு நாமகள் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இந்த அறிமுக போட்டிகளில் பங்கேற்றன.
7 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
16 Nov 2025
16 Nov 2025