Shanmugan Murugavel / 2016 ஜூலை 30 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட உறவுகளின் ஞாபகார்த்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் சொந்தமண்ணிலே முதலிடத்தினை பெற்றுக்கொண்டது.
மேற்படி கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 26கழகங்கள் பங்கேற்று, இறுதிப்போட்டிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகமும் கல்லடி யூத் கழகமும் தெரிவாகியிருந்தன. போட்டியின் வழமையான நேரத்தில் இரு அணிகளும் எவ்விதமான கோல்களையும் இடாத சந்தர்ப்பத்தில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்காக பெனால்டி மத்தியஸ்தரினால் வழங்கப்பட்டது. பெனால்டியில், இராமகிருஸ்ணா வெற்றி பெற்று முதலிடத்தினை பெற்றுக்கொண்டது. இரண்டாம் இடத்தினை கல்லடி யூத் அணியும், மூன்றாம் இடத்தினை கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியும் பெற்றதுடன் சிறந்த வீரர், சிறந்த கோல்காப்பாளார், அதிக கோல்களை உட்செலுத்தியவர் போன்றோருக்கு கிண்ணங்களும் வழங்கப்பட்டது.
போட்டியின் இறுதியில் அதிதிகள் மைதானத்திற்குள் அழைத்து வரப்பட்டு சமாதானப்புறாவும் சிறுவர்களால் பறக்கவிடப்பட்டது. மேலும் கேக் வெட்டப்பட்டு நடுவர்களுக்கு சிறுமிகளால் ஏந்தி கொண்டுவரப்பட்ட விளையாட்டுக்கான பந்து மற்றும் ஊதியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் விளையாட்டு கழகத்திற்காக தங்களை அர்பணித்து உயிரிழந்த உறவுகளின் குடும்பங்களுக்கு அவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக சிறுதொகை பணம் வங்கிக்கணக்கில் இடப்பட்டு வழங்கப்பட்டது.
நிகழ்வினை சிறப்பிப்பதற்காக இசை நிகழ்வும் நடைபெற்றது. கழக தலைவர் பு.தனராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர், அதிபர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
54 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago
5 hours ago