2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

சீனடிக் கலையில் தேசியத்தில் புத்தளம் சாஹிரா

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் உயர்தர மாணவர்கள் சீனடிக் கலை போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாமிடத்தை பிடித்து தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டு  பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் ஐ.ஏ. நஜீம் தெரிவித்துள்ளார்.

மேற்படி சீனடிக் கலையின் மாகாண மட்ட போட்டிகள் கெகுணுகொல்ல தேசிய கல்லூரியில் வியாழக்கிழமை (09) நடைபெற்றபோது சாஹிரா சார்பில் ஜே. சாஜித் (தலைவர்), எம்.ஏ.எம். ஆதில், எம்.கே. கைஸ், எம்.எச். ஹயிதம் காசிம், எம்.ஏ.எம். அஸ்மத், எஸ்.எம். அர்ஷத், எம்.எம்.எம். முன்தீர், எம்.ஆர்.எம். றஹீக் ஆகிய மாணவர்களை பயிற்றுவித்து வெற்றிப் பாதைக்கு வழிகாட்டிய ஆசிரியர் எம்.ஏ.எம் சுபியான் ஆகியோருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அதிபர் ஐ.ஏ. நஜீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X