Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 நவம்பர் 02 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இக்பால் அலி
சிவன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் யாழ். மத்திய கல்லூரியின் மாணவர் முதல்வர் பொன். விபுலானந்தன் ஞாபகார்த்த கிண்ணத்துக்காக 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள், ஆண்கள் அணிகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்டத் தொடரில் திருக்குடும்பக் கன்னியர் மட அணி, யாழ். மத்திய கல்லூரி அணிகள் சம்பியனாகின. நிகழ்வுக்குத் தலைமை விருந்தினராக, தமிழீழ விடுதலை இயக்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும் சிவன் அறக்கட்டளையின் இயக்குனருமான கணேஸ்வரன் வேலாயுதம் கலந்து கொண்டார்.
பெண்கள் பிரிவு
யாழ். மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இப்போட்டி நடைபெற்றது. திருக்குடும்பக் கன்னியர் மட அணியை எதிர்த்து, வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி இறுதிப் போட்டியில் மோதியது. முதலாவது காற்பகுதியை 11-01 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றிய திருக்குடும்பக் கன்னியர் மட அணி, முதற்பாதியின் நிறைவில், 20-6 என்ற அடிப்படையில் ஆதிக்கம் செலுத்தியது. மூன்றாவது காற்பகுதியை 05-03 என்ற அடிப்படையில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை கைப்பற்றியது. நான்காவது காற்பகுதி 14-01 என்ற அடிப்படையில் திருக்குடும்பக் கன்னியர் மட அணியின் வசமானது.
ஒட்டுமொத்தமாக திருக்குடும்பக் கன்னியர் மட அணி, 37 புள்ளிகளையும் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி 12 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன. இதன் மூலம் திருக்குடும்பக் கன்னியர் மட அணி சம்பியனானது.
ஆண்கள் பிரிவு
ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், யாழ். மத்திய கல்லூரியை எதிர்த்து மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை அணி மோதியது. போட்டியின் முதற் காற் பகுதியில் யாழ். மத்திய கல்லூரி 10 புள்ளிகளையும் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி 11 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன. போட்டியின் இரண்டாவது காற் பகுதியில் யாழ். மத்திய கல்லூரி 13 புள்ளிகளையும் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி 17 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன.
போட்டியின் மூன்றாவது காற் பகுதியில் யாழ். மத்திய கல்லூரி 17 புள்ளிகளையும் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி 21 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன. போட்டியின் நான்காவது காற் பகுதியில் யாழ். மத்திய கல்லூரி 27 புள்ளிகளையும் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி 13 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன.
ஒட்டுமொத்தமாக யாழ். மத்திய கல்லூரி, 67 புள்ளிகளையும் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி 54 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன. இதன் மூலம் யாழ். மத்திய கல்லூரி அணி சம்பியனானது.
இந்நிகழ்வில், யாழ். மத்திய கல்லூரியின் அதிபர் கே. எழில்வேந்தன், உப அதிபர் திருஞானசம்பந்தன், ஆசிரியர் பாலபவன், விளையாட்டு முதல்வர் சுகிர்தன், வல்வை நகர சபையின் முன்னால் உபதலைவர் சதீஸ்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவத் தலைவரான பொன். விபுலானந்தன், பாடசாலையில் தனது கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து வந்த சன்னங்களால் உயிர் துறந்திருந்தார். அவரின் நினைவாகவே, இந்தத் தொடர் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago