2025 ஜூலை 05, சனிக்கிழமை

சம்பியனானது ஊரெழு றோயல்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 06 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

நாவாந்துறை சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஊரெழு றோயல் அணி சம்பியனாகியது.

அமரர்களான ரட்ணம், பாலசிங்கம், துரைசிங்கம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் நடைபெற்ற இந்தச் சுற்றுப்போட்டியில் 26 கால்ப்பந்தாட்ட அணிகள் விளையாடின.

அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் விலகல் முறையில் நடத்தப்பட்டது. இரண்டு பிரிவுகளிலும் இரண்டு அணிகள் தெரிவு செய்யப்பட்டு அரையிறுதியாட்டங்கள் நடைபெற்றன.

அரையிறுதியாட்டங்களில் ஊரெழு றோயல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் பாடும்மீன் அணியையும், கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி, சமநிலை தவிர்ப்பு உதையில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் மயிலங்காடு ஞானமுருகன் அணியையும் வென்றது.

இறுதிப்போட்டி செவ்வாய்க்கிழமை (02) மாலை சென்.மேரிஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் முதற்பாதியாட்டத்தில் றோயல் அணியின் ஆர்.பிலாவியா மற்றும் த.சயந்தன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல் அடித்தனர். யங்கம்பன்ஸ் அணி சார்பாக நிரோஜன் ஒரு கோல் அடித்தார். முதல் பாதியாட்டத்தில் றோயல் அணி 2-1 என்று முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியாட்டத்தில் தொடர்ந்தும் ஆதீக்கம் செலுத்திய றோயல் அணி 2 கோல்களை அடித்தது. அதனை அவ்வணியின் எஸ்.சோபன் அடித்தார். போட்டியின் முடிவில் றோயல் அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக றோயல் அணியின் சோபன் தெரிவு செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .