Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 14 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அம்பாறை அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்க ழகத்தின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் நடைபெற்ற 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட “ஜொலிபோய்ஸ் வெற்றிக்கிண்ணம் 2016” வெற்றிக்கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டியில், ஒலுவில் லெவிண் ஸ்டார் கழகம் சம்பியனாக தெரிவானது.
இறுதிப் போட்டியில், தைக்கா நகர் எவடொப் அணியினரை எதிர்கொண்ட ஒலுவில் லெவிண் ஸ்டார் கழகம், 17 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவானது.
மொத்தமாக 32அணிகள் கலந்து கொண்ட, விலகல் முறையில் ஆறு நாட்கள் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டிக்காக இவ்விரு அணிகளும் தெரிவாகின.
இறுதிப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற லெவிண் ஸ்டார் அணி, முதலில் துடுப்பெடுத்தாடியது. அணியின் வீரர் ஏ.அதீலின் அபாரத் துடுப்பாட்டத்தின் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்ட 35 ஓட்டங்களுடன், 10ஓவர்கள் நிறைவினில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எவடொப் அணி, 9.2ஓவர்களின் நிறைவினில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 93ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இறுதிப் போட்டியின் நாயகனாக, 35ஓட்டங்களைப் பெற்ற ஒலுவில் லெவிண் ஸ்டார் அணியின் வீரர் வீரர் ஏ.அதீல் தெரிவு செய்யப்பட்டதுடன், தொடர் நாயகன் விருதை, அதேயணியைச் சேர்ந்த எம்.ஏ.றஸ்மி தட்டிச் சென்றார்.
இதேவேளை, ஜொலிபோய்ஸ் அணியின் முன்னாள் வீரர் ச.கேதீஸ்வரனின் பிள்ளைகளின் கல்வி நிலையை ஊக்குவிக்கும் முகமாக தனவந்தர் ஒருவரின் அன்பளிப்பு மூலம் 50ஆயிரம் ரூபாய், கழகத்தினால் வழங்கி வைக்கபட்டதுடன் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆசிரியரும் ஜொலிபோய்ஸ் அணியின் முன்னாள் வீரருமான சா.இன்பராஜா பெற்றுக் கொண்டார்.
இறுதிப் சுற்றுப்போட்டியின் நிகழ்வுகளில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்து கொண்டதுடன் ஜொலிபோய்ஸ் அணியின் முன்னாள் வீரரும் தொழிலதிபருமான ஆரியதாச டட்லி உள்ளிட்ட கழக வீரர்கள் கழக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற அணிக்கான சம்பியன் கிண்ணத்தினையும் ஏனைய விருதுகளையும் அதிதிகள் வழங்கி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago