2025 ஜூலை 05, சனிக்கிழமை

சம்பியனானது ஒலுவில் லெவிண் ஸ்டார்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சின்னப்பாலமுனை சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக் கழகத்தின் 30ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு எட்டுப் பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், ஒலுவில் லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம், 2016ஆம் ஆண்டுக்கான சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.

சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி.முஹாஜிரீன் தலைமையில், ஹிக்மா விளையாட்டு மைத்தானத்தில், இறுதிப் போட்டி, அண்மையில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில்,ஒலுவில் லெவிண் ஸ்டார், பாலமுனை றை ஸ்டார் ஆகிய அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய ஒலுவில் லெவிண் ஸ்டார், ஐந்து ஓவர்களில், நான்கு விக்கெட்டுகளை இழந்து 71 ஓட்டங்களைப் பெற்றது. 72 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய, பாலமுனை றை ஸ்டார் விளையாட்டுக் கழகம், ஐந்து ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 51 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 20 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

இத்தொடரின் சிறப்பாட்டக்கரராக, 63 ஓட்டங்களையும் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஒலுவில் லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எம்.ஏ.றஸ்மி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இத்தொடரில், அம்பாறை மாவட்டத்திலிருந்து 34 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றி இருந்தன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .