2025 ஜூலை 05, சனிக்கிழமை

சம்பியனானது ஒலுவில் லெவின் ஸ்டார்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ரீ.கே.றஹ்மத்துல்லா, றியாஸ் ஆதம்

அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்தின் 22ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட "சோபர் நைட் ட்ரொபி” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், ஒலுவில் லெவின் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவானது.

அட்டாளைச்சேனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள 76 முன்னணிக் கழகங்களுக்கிடையில் ஒரு வாரகாலமாக, இரவு நேர மென்பந்து சுற்றுப் போட்டியாக இது இடம்பெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி, நிந்தவூர் இம்றான் அணிக்கும் ஒலுவில் லெவின் ஸ்டார் அணிக்குமிடையில் அண்மையில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஒலுவில் லெவின் ஸ்டார் அணி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்குத் தீர்மானித்தது. இதன்படி அவ்வணி, நிர்ணயிக்கப்பட்ட 5 ஒவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இம்றான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 37 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதன்படி இப்போட்டியில் லெவின் ஸ்டார் அணி, 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றுச் சம்பியனானது.

இத்தொடரின் நாயகனாக லெவின் ஸார் அணியின் எம்.ஏ. சிபான் தெரிவானார்.

இப்போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகமும் ஒலுவில் லெவின் ஸார் விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டதில், ஒலுவில் லெவின் ஸ்டார் கழகம் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது. மற்றைய அரையிறுதிப் போட்டி, அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்துக்கும் இம்றான் விளையாட்டுக் கழகத்துக்குமிடையில் நடைபெற்று, இம்றான் அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
சோபர் விளையாட்டுக் கழகத்தின் உபதலைவர் ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் நடைபெற்ற இறுதி நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .