2025 ஜூலை 05, சனிக்கிழமை

சம்பியனானது காத்தான்குடி அக்ரம்ஸ் வி.க

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி அக்ரம்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 27வது ஆண்டு நிறைவையொட்டி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டியில் காத்தான்குடி அக்ரம்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியுள்ளது.

பத்து ஓவர்கள் கொண்ட இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டி, காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானம் மற்றும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் ஆகிய மைதானங்களில் நடைபெற்றது.

12 கழகங்கள் பங்கு பற்றிய இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு காத்தான்குடி அக்ரம்ஸ் விளையாட்டுக்கழகமும் காத்தான்குடி மதீனாஸ் விளையாட்டுக்கழகமும் தெரிவு செய்யப்பட்டன.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மதீனாஸ் அணி பத்து ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காத்தான்குடி அக்ரம் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து ஒன்பதாவது ஓவரில் 54 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரனாக காத்தான்குடி அக்ரம் அணியின் சார்பில் எம்.எம்.எம்.பாஹீம் தெரிவு செய்யப்பட்டார்.

 இதன் பரிசளிப்பு வைபவத்தில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் மற்றும் அக்ரம்ஸ் விளையாட்டுக்கழகத்தின் முக்கியஸ்தர்களான ஏ.எல்.சமீம் மற்றும் எம்.லாபீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .