2025 ஜூலை 05, சனிக்கிழமை

சம்பியனானது கொழும்பு வெஸ்லிக் கல்லூரி

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 09 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு சாஹிராக் கல்லூரி மைதானத்தில், கொழும்பு சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் தலைவர்கள் சங்கம், 12ஆவது முறையாக நடாத்திய சுப்பர்-16 கால்பந்தாட்டத் தொடரில், கொழும்பு சாஹிராக் கல்லூரியைத் தோற்கடித்து, கொழும்பு வெஸ்லிக் கல்லூரி சம்பியனாகியுள்ளது.

விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில், போட்டியின் வழமையான நேரம் வரைக்கும் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், சம்பியனாகும் அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு வழங்கப்பட்ட பெனால்டியில், கொழும்பு வெஸ்லிக் கல்லூரி, வெற்றி பெற்றுச் சம்பியனாகியது. இவ்விறுதிப் போட்டியின் நாயகனாக, கொழும்பு சாஹிராக் கல்லூரியின் எம்.ஷஹ்லீல் தெரிவு செய்யப்பட்டார்.  இத்தொடரின் மூன்றாமிடத்தை, மானிப்பாய் இந்துக் கல்லூரி தெரிவானது.

தொடரின் சிறந்த கோல் காப்பாளராக, கொழும்பு வெஸ்லிக் கல்லூரியின் எம்.நிப்ராஸ் தெரிவானதுடன், தொடரின் பெறுமதி வாய்ந்த வீரராக, கொழும்பு சாஹிராக் கல்லூரியின் எம்.ஷப்ராஸ் தெரிவானதுடன், தொடரின் சிறந்த நன்னடத்தையை வெளிப்படுத்திய அணியாக, கண்டி திரித்துவக் கல்லூரி அணி தெரிவு செய்யப்பட்டது.

இத் தொடரின், ஷீல்ட் வெற்றியாளர்களாக, நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லாக் கல்லூரி தெரிவானதுடன், இரண்டாமிடத்தை, கொழும்பு இசிப்பத்தானக் கல்லூரி பெற்றது. போல் வெற்றியாளர்களாக, கொழும்பு சென்.பெனடிக்ற்ஸ்‌ கல்லூரி தெரிவானதுடன், இரண்டாமிடத்தினை, கொழும்பு சென்.பீற்றர்ஸ் கல்லூரி பெற்றது. பிளேட் வெற்றியாளர்களாக, கொழும்பு றோயல் கல்லூரி தெரிவானதுடன், இரண்டாமிடத்தினை, கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .