Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 22 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
அகில இலங்கை ரீதியில் ஒன்பதாவது வருடமாக இடம் பெற்ற மூத்த விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டித் தொடரில் சம்பியனாக 431 புள்ளிகளை பெற்ற கண்டி மாவட்டம் தெரிவானதுடன் இரண்டாம் இடத்தை 372 புள்ளிகளை பெற்ற கொழும்பு மாவட்டம் பெற்றுக் கொண்டது.
கண்டி போகம்பறை மைதானத்தில், இப் போட்டி இரண்டு நாட்களாக இடம் பெற்றிருந்தது. இதில், பிரதம அதிதியாக மத்திய மாகாண கைத்தொழில் மகளிர் விவகார இளைஞர் அபிவிருத்தி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் திருமதி குமுது கருனாரத்னவும், விசேட அதிதிகளாக் மத்திய மாகாண சபை அங்கத்தவர் காமினி விஜேபண்டார , மற்றும் அசங்க திலக்கரத்ன ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களையும் கேடயங்களையும் வழங்கினர்.
மத்திய மாகாண மூத்த விளையாட்டு வீரர்களது சங்கம் இதனை ஒன்பதாவது வருடமாக ஒழுங்கு செய்திருந்தது. 35 வயது முதல் 99 வயது வரையான 12 வயதுப் பிரிவுகளில் இப்போட்டிகள் இடம்பெற்றன. மொத்தமாக 372 புள்ளிகளைப் பெற்ற கொழும்பு மாவட்டம் இரண்டாம் இடத்தையும் 431 புள்ளிகளைப் பெற்ற கண்டி மாவட்டம் முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டு சம்பியனாகவும் தெரிவாகின.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Jul 2025