2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சம்பியனானது கந்தளாய் பிரதேச செயலகம்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 05 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

ஒன்பதாவது, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபா் கிரிக்கெட் வெற்றிக் கிண்ணத்தை, கந்தளாய் பிரதேச செயலக அணி கைப்பற்றி, 2016ஆம் ஆண்டுக்கான மாவட்ட சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக அணிகளுக்கிடையே 10 ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி, கிண்ணியா எழிலரங்கு மைதானத்திலும், அல் இா்பான் வித்தியாலய மைதானத்திலும் கோலாகலமாக நடைபெற்றது.

இச்சுற்றுப் போட்டியில் 12  அணிகள் பங்குபற்றின. அரையிறுதிப் போட்டியில், கிண்ணியா பிரதேச செயலக அணியும் கந்தளாய் பிரதேச செயலக அணியும் மோதியது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிண்ணியா அணி ஒன்பது ஓவா்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 31 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கந்தளாய் அணி, ஐந்து ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி  32 ஓட்டங்களைப் பெற்று, வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது.

மறுபக்க அரையிறுதியாட்டத்தில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக அணியும் சேருநுவர பிரதேச செயலக அணியும் மோதிக்கொண்டன. இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய பட்டினமும் சூழலும் அணி 10 ஓவா்களில் ஒன்பது  விக்கெட்டுக்களை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சேருவில பிரதேச செயலக அணி ஒன்பது ஓவா்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 63 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் 20 ஓட்டங்களால் பட்டினமம் சூழலும் பிரதேச செயலக அணி வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது.

இறுதியாட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பட்டினமும் சூழலும் அணி 10 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கந்தளாய் அணி ஒன்பது ஓவா்களில் 63 ஓட்டங்களைப் பெற்று, ஆறு விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று 2016ஆம் ஆண்டுக்கான சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.

இவ் வைபவத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபா் என்.எஸ்.புஸ்பகுமார அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.

அடுத்த வருடம், 10ஆவது அரசாங்க அதிபர் கிண்ணத்துக்கான போட்டி குச்சவெளி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதாக இதன் போது அறிவிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .