Shanmugan Murugavel / 2016 நவம்பர் 09 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பூவரசன்

பசறை பிரதேச பெருந்தோட்ட கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, பசறை - 13 ஆம் கட்டை, கனவரல்ல தோட்ட கரப்பந்தாட்டத் திடலில் அண்மையில் நடைபெற்றது.
கனவரல்ல தமிழோசை கரப்பந்தாட்ட அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சுற்றுப்போட்டியில் பசறை பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள 28 கரப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றின.
இறுதிப் போட்டியில், கோணக்கலை, மேற்பிரிவு தோட்ட கென்னடி கரப்பந்தாட்ட அணியும் போட்டியை ஏற்பாடு செய்து நடாத்திய கனவரல்ல தோட்ட தமிழோசை அணியும் மோதின. இப்போட்டியின் முதலிரண்டு செட்களையும் 25-21, 25-22 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய கனவரல்ல தமிழோசை அணி, கென்னடி அணியை வீழ்த்தி வெற்றிக்கிண்ணத்தை தம்வசமாக்கியது.
போட்டித்தொடரின் சிறந்த வீரராக தமிழோசை அணி வீரர் R.சுருபன் தெரிவு செய்யப்பட்டார். இப்போட்டித் தொடரில் இரண்டாமிடம் பெற்ற கோணக்கலை, மேற்பிரிவு தோட்ட கென்னடி அணி, மூன்றாமிடம் பெற்ற மீதும்பிட்டிய தோட்ட நிவ்ஷாந்தி அணிக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
இப்போட்டியின் போது, கனவரல்ல தோட்ட கரப்பந்தாட்ட அணியின் மூத்த வீரர்கள் வரவேற்கப்பட்டு, அவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago