2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

சம்பியனானது களுதாவளை கெனடி வி.க

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.எல். அப்துல் அஸீஸ்

அம்பாறை நீலாவணை நியூஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.

41 அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரின் இறுதிப் போட்டி, அம்பாறை நீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில், மட்டக்களப்பு களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகமும், மட்டக்களப்பு மண்டூர் அருள்மணி விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன. இதில் 9 விக்கெட்டுக்களால், களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.

வெற்றிபெற்ற அணிக்கு, 7 அடி உயரமுடைய வெற்றிக்கிண்ணத்தை அதன் தலைவர் பா.பவித்திரன், செயலாளர் பா.சுரேஷ், பொருளாளர் ச. கண்ணன் ஆகியோர்கள் இணைந்து, களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் த. நீலாம்பரன்னிடம் வழங்கி வைத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X