Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
அட்டாளைச்சேனை கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சோபர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாமிடத்தை ஒலுவில் லோயல் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது.
அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் தலைவர் எம்.ஐ முஹம்மட் நபீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்து கொண்டு இச்சுற்றில் வெற்றிபெற்ற அணிக்கு பணப்பரிசிலையும், கிண்ணத்தையும் வழங்கி வைத்தார்.
இரண்டாமிடம் பெற்ற அணிக்குரிய கிண்ணத்தை கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்த அக்கரைப்பற்று மக்கள் வங்கியின் முகாமையாளர் எஸ்.எம்.இமாமுதீன் வழங்கிவைத்தார்.
அட்டாளைச்சேனை கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகமும், ஒலுவில் லோயல் விளையாட்டுக் கழகமும் தெரிவாகியது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஒலுவில் லோயல் அணியினர் 3 விக்கட்டுக்களை இழந்து 60 ஒட்டங்களைப் பெற்றனர். இதில் நிஸ்மி 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
வெற்றி பெறுவதற்கு 61 ஓட்டங்களைப்பெறுவதற்காகத் துடுப்பெடுத்தாடிய சோபர் அணியினர் 4.3 பந்துவீச்சு ஓவர்களில் 63 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டினர். இதில் அபாரமாக ஆடிய முபாரீஸ் 35 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
சோபர் விளையாட்டுக் கழகம் 2016 ஆம் ஆண்டின் கோல்ட் ஸ்டார் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
இச்சுற்றுப்போட்டியின் தொடரின் சிறப்பாட்டக்காரராக அக்ரம் தெரிவு செய்யப்பட்டதுடன் இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக முபாரீஸ் தெரிவாகியதுடன் கிண்ணங்களையும் அதிதிகளிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
55 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
5 hours ago