Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 12 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
பள்ளிக்குடியிருப்பு யங்மென் விளையாட்டுக் கழகம், தனது 34ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய, 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட, அணிக்கு 11 பேர் கொண்ட, மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில், பாலமுனை அல் அறபா விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
32 அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி, பள்ளிக்குடியிருப்பு அதாவுல்லா விளையாட்டு மைதானத்தில், அண்மையில், மிக விமரிசையாக நடைபெற்றது.
இறுதிப் போட்டியில், பாலமுனை அல் அறபா அணியும் பள்ளிக்குடியிருப்பு யங்மேன் அணியும் மோதின. இதில், பாலமுனை அல்-அறபா அணி, மூன்று விக்கெட்டுகளால் வெற்றியீட்டி யங்மென் வெற்றிக் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக, அல்- அறபா அணியின் தலைவர் ஏ.சுபியான், தொடர் ஆட்ட நாயகனாக, எம்.அம்ஜத், இறுதிப் போட்டியில், ஹட்-ரிக் சாதனை நிகழ்த்தியதற்காக எம்.சபான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
யங்மென் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாரத்ன பிரதம அதிதியாகவும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் எம்.ஏ.றாசிக் கௌரவ அதிதியாகவும் விஷேடே அதிதியாக, அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னால் உப தவிசாளார் ஹக்கீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கிண்ணங்களையும்,பரிசில்களையும் வழங்கி சிறப்பித்தார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago