Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
கல்பிட்டி வீதி பூலாச்சேனை கரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற மெகா கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் "ஏ" பிரிவு சம்பியனாக பூலாச்சேனை சுப்பர் கிங்க் அணியும், "பி" பிரிவு சம்பியனாக பாலாவி புழுதிவயல் அல் பலாஹ் அணியும் தெரிவாகியுள்ளன.
இத்தொடரை, பூலாச்சேனை கோல்ட் மூன் விளையாட்டுக் கழகமும், பூலாச்சேனை புதுப்பித்தல் மற்றும் புனர்நிர்மாணம் மேற்கொள்ளும் சங்கமும் (ஆர்.ஆர்.எஸ்) இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
விலகல் அடிப்படையிலான இந்த தொடரில் தேசிய ரீதியாக எட்டு அணிகளும், கல்பிட்டி மற்றும் முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட எட்டு அணிகளும் பங்கு பற்றின.
இந்த தொடரில் "ஏ" பிரிவில் இரண்டாம் இடத்தினை ஹொரன நியூ பெக் அணியும், "பி" பிரிவில் இரண்டாம் இடத்தினை தாராவில்லு அணியும் பெற்றுக்கொண்டன. "ஏ" பிரிவில் சம்பியனாகிய அணிக்கும், இரண்டாம் இடத்தினை பெற்ற அணிக்கும் வெற்றிக்கிண்ணங்களோடு ரொக்கப்பணமாக முறையே 75 ஆயிரம் ரூபாவும், 50 ஆயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டன.
"பி" பிரிவில் சம்பியனாகிய அணிக்கும், இரண்டாம் இடத்தினை பெற்ற அணிக்கும் வெற்றிக்கிண்ணங்களோடு ரொக்கப்பணமாக முறையே 50 ஆயிரம் ரூபாவும், 35 ஆயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வாணிப துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார். புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலிசப்ரி, முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்யாஸ் உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கு உரையாற்றுகையில், இவ்வருட இறுதிக்குள் பூலாச்சேனை பிரதான வீதியின் ஒரு கிலோ மீட்டர் தூரத்தினை காபட் பாதையாக மாற்றி தருவதோடு அடுத்த வருட இறுதிக்குள் பூலாச்சேனையில் சிறந்த கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானத்தை அமைத்து தருவதாகவும் உறுதி அளித்தார்.
53 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago
5 hours ago