Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 28 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்ரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணிகள் மோதும் சினேக பூர்வ 'வடக்கு நீலங்களின் சமர்' எனும் கிரிக்கெட் கடினப்பந்துச் சுற்றுப்போட்டி கடும் மழை காரணமாகச் சமநிலையில் முடிவடைந்தது.
முதல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி களத்தடுப்பினைத் தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி, முதல் இனிங்ஸில் 9 விக்கெட்டு களை இழந்து 226 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில் யுகேந்திரன் 136 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்களைப் பெற்றார். கிருசான் 105 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பிரதாப் 56 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் அடங்கலாக 31 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றனர்.
கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி சார்பில் பந்து வீச்சில் பேபிசன் 27.2 ஓவர்கள் பந்து வீசி 76 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், தமிழ்மாறன் 15 பந்து பரிமாற்றங்களில் 60 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், வினித் மற்றும் தமிழ்இனியன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டு களையும் வீழ்த்தினர்.
தமது முதல் இனிங்ஸை ஆரம்பித்த கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணியினர் 33 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில் முதல்நாள் ஆட்டம் நிறைவடைந்தது. இரண்டாம் நாளான சனிக்கிழமை தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருந்தமையால் போட்டியை சமநிலையில் முடிவுக்கு கொண்டுவர நடுவர்கள் தீர்மானித்தனர். அந்த வகையில் 10வது வடக்கு நீலங்களின் சமர் போட்டி யானது சமநிலையில் முடிவடைந்தது.
10 வது நீலங்களின் சமர் போட்டியுடன் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி 4 தடவையும், கிளிநொச்சி மத்திய மகா வித்தி யாலயம் 2 தடவையும் கிண்ணங்களைக் கைப்பற்றியதுடன், ஏனைய நான்கு போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
10 போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் துடுப்பாட்ட வீரராக கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி தலைவர் யுகேந்திரன் தெரிவானார். சகலதுறை பிரதிக்சன் தெரிவானார்.
4 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago