2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சம்பியனாகியது கஜபாகு றெஜிமண்ட்

குணசேகரன் சுரேன்   / 2017 ஜூன் 12 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகம் நடத்திய கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், கஜபாகு றெஜிமண்ட் சம்பியனாகியது. 

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 98ஆவது ஆண்டு நிறைவையொட்டி, “வடக்கின் வல்லரசன் யார்?” எனும் மாபெரும் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி, அரியாலை சரஸ்வதி விளையாடுக் கழக அரங்கில், நேற்று முன்தினமும்  (10) நேற்றும் (11) நடைபெற்றது.   

இச்சுற்றுப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட எட்டு அணிகள் பங்குபற்றியிருந்த நிலையில், இறுதிப் போட்டிக்கு, ஆவரங்கால் இந்து அணியும், கஜபாகு றெஜிமண்ட் அணியும் தெரிவாகின. இறுதிப் போட்டியில், கஜபாகு றெஜிமஸ்ட் அணி, 3-1 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனாகியது.   

இச்சுற்றுப் போட்டியானது, 2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றுப் போட்டியில், அநுராதபுரம் இராணுவ அணியும், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றுப் போட்டியில், ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .