Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
குணசேகரன் சுரேன் / 2018 நவம்பர் 30 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், விளையாட்டுக் கழங்களின் 20 வயதுக்குட்பட்ட கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடரில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடத்தப்பட்டு வந்த இத்தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், சமரபாகு நியூட்டன் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பலாலி விண்மீன் அணியும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இமையாணன் மத்திய அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி றேஞ்சர்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.
இந்நிலையில், நேற்று நடந்த இத்தொடரின் இறுதிப் போட்டியில், ஆரம்பம் முதல் றேஞ்சர்ஸ் அணியின் ஆதிக்கம் மைதானத்தில் நிலைபெற்றது. முதல்பாதியில் மூன்று கோல்களைப் பெற்று றேஞ்சர்ஸ் அணி ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
அதேஉத்வேகத்துடன் விளையாடி இரண்டாவது பாதியில் மேலும் இரண்டு கோல்களைப் பெற்று இறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்று றேஞ்சர்ஸ் அணி சம்பியனாகியது. றேஞ்சர்ஸ் அணி சார்பாக, வர்மன் இரண்டு கோல்களையும், ஆர்த்திகன், கீர்த்திகன், ஆர்நியன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
இத்தொடரின் நாயகனாக விண்மீன் அணியின் ரதனும் சிறந்த கோல் காப்பாளராக நியூட்டன் அணியின் அனுசாந்தும் இறுதிப் போட்டியின் நாயகனாக றேஞ்சர்ஸ் அணியின் கீர்த்திகனும் அதிக கோல்களை பெற்ற வீரனாக இமையாணன் மத்திய அணியின் அலெக்சனும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இத்தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில், நியூட்டன் அணியை எதிர்கொண்ட இமையாணன் மத்தி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாமிடத்தைப் பெற்றது.
6 hours ago
6 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
03 Oct 2025