2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சம்பியனாகியது சென்றலைட்ஸ்

குணசேகரன் சுரேன்   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில், வட மாகாண கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில், யாழ்ப்பாணம் சென்றலைட்ஸ் சம்பியனாகியது.

வவுனியா பம்பைமடு பல்கலைகழக மைதானத்தில், நேற்று முன்தினம் நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், வவுனியா யுனிபிட்டை வென்றே சென்றலைட்ஸ் சம்பியனாகியது.

50 ஓவர்களைக் கொண்ட இத்தொடரில், போதிய நேரமின்மையால், 45 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு நடத்தப்பட்ட இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ், 45 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், கௌதமன் 63, நிரோஜன் ஆட்டமிழக்காமல் 47, பிரியலக்சன் 47, டர்வின் 36, ஜனோசன் 27 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு, 252 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய யுனிபிட், 43.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்று 62 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், நிமலேஸ் 43, ருசாந்தன் 24, மதுசன் 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அலன்ராஜ் 3, மயூரன், ஜெரிக்துசாந்த், தசோபன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .