Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
குணசேகரன் சுரேன் / 2019 ஏப்ரல் 07 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரியாலை நூறாவது ஆண்டு சுதேசிய திருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரில் சென்றலைட்ஸ் சம்பியனாகியது.
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 24 அணிகள் பங்குபற்றிய இத்தொடரில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஏ.பி அணியை வென்றே சென்றலைட்ஸ் சம்பியனாகியது.
இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற சென்றலைட்ஸ், முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானித்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஏ.பி அணி, 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஆதித்தன் 44, உத்தமக்குமரன் 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அலன்ராஜ் 3, மயூரன், ஜெரிக்துசாந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 136 என்ற ஓட்டங்களென்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ், அலன்குமார், செல்ரன், ஜெனோசன் ஆகியோரின் துடுப்பாட்டத்தால், 17.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், அலன்குமார் 49, செல்ரன் ஆட்டமிழக்காமல் 39, ஜெனோசன் 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், திலுக்ஸன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இறுதிப் போட்டியின் நாயகனாக சென்றலைட்ஸின் அலன்குமார், சிறந்த துடுப்பாட்ட வீரராக ஏபி அணியின் ஆதித்தன், சிறந்த பந்துவீச்சாளராக அதே அணியின் திலுக்ஸன், சிறந்த களத்தடுப்பாளராக சென்றலைட்ஸின் மயூரன் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Jul 2025