Editorial / 2018 மார்ச் 14 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

யாழ். கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான எல்லே தொடரின் இறுதிப் போட்டி, யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
குறித்த இறுதிப் போட்டியில், வாதரவத்தை விக்னேஸ்வரா கல்லூரி அணியை எதிர்த்து உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலய அணி மோதியது.
இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய வாதரவத்தை விக்னேஸ்வரா கல்லூரி அணியின் யானுசா ஓர் ஓட்டத்தைப் பெற்றுக்கொடுக்க, அவ்வணி 30 பந்துகளில் 14 விக்கெட்டுகளை பறிகொடுத்து ஓர் ஓட்டத்தைப் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலய அணியினர் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய வீராங்கனைகளின் நுட்பமான களத்தடுப்பால் ஓட்டத்தை பெறுவதில் சிரமப்பட்டனர். இதனால் வழங்கப்பட்ட 30 பந்துகளில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து ஓட்டமெதனையும் பெறாமல் தோல்வியடைய, வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய அணி ஓர் ஓட்டத்தால் வெற்றிபெற்று சம்பியனாகியது.
இத்தொடரின் மூன்றாமிடத்தை யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் அணி பெற்றது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago