Freelancer / 2023 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி. சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழக 40 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஜொலிபோய்ஸ் சம்பியன் கிண்ணத் தொடரில் ஒலுவில் லெவிண் ஸ்டார் சம்பியனானது.
தர்மசங்கரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற 32 கழகங்களை உள்ளடக்கிய இத்தொடரின் இறுதிப் போட்டியில் பள்ளிக்குடியிருப்பு றகிமியா அணியை வென்றே லெவிண் ஸ்டார் சம்பியனானது.
8 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இத்தொடரின் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற லெவிண் ஸ்டார், றகிமியாவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய றகிமியா அணி 8 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 62 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய லெவிண் ஸ்டார், 6.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக லெவிண் ஸ்டாரின் மலீக்கும், தொடரின் நாயகனாக அதேயணியின் சிபான் தெரிவானார்.
இரண்டாமிடத்தைப் பெற்ற றகிமியாவுக்கு 30,000 ரூபாய் பணப்பரிசும், சம்பியனான லெவிண் ஸ்டாருக்கு 50,000 ரூபாய் பணப்பரிசும் சம்பியன் கிண்ணமும் வழங்கப்பட்டது.
5 minute ago
19 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
19 minute ago
32 minute ago