Freelancer / 2023 ஜூலை 13 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
கல்முனை இஸ்லாமாபாத் விளையாட்டுக் கழகம் நடத்திய இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடரில் நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தை வென்றே இம்ரான் சம்பியனானது.
இப்போட்டியின் நாணயச் சுழச்சியில் வென்ற பிளையிங் ஹோர்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 148 ஒட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், முஹம்மட் றிஸ்னி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு 149 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இம்ரான் 17 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், நிஸ்கி அஹமட் 75 ஓட்டங்களைப் பெற்றார்.
இறுதிப் போட்டியின் நாயகனாக நிஸ்கி அஹமட் தெரிவானார்.
34 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
1 hours ago