குணசேகரன் சுரேன் / 2017 ஜூன் 18 , பி.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}


அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 98ஆவது ஆண்டு நிறைவையொட்டி, “யாழின் நட்சத்திரம் யார்?” என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், அராலி சரஸ்வதி அணி சம்பியனாகியது.
இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி, அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழக மைதானத்தில், நேற்று (17) நடைபெற்றது. இதில், அராலி சரஸ்வதி அணியை எதிர்த்து வின்ஸ்ரார் அணி மோதியது.
போட்டியின் முதற்பாதி முடிவில், 18-14 என்ற புள்ளிகள் கணக்கில், அராலி சரஸ்வதி அணி முன்னிலை வகித்திருந்த நிலையில், இரண்டாவது பாதியில், வின்ஸ்ரார்ஸ் அணி மிகுந்த போராட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், தடுமாறாமல் ஆடிய அராலி அணி, இரண்டாவது பாதியில், 12-11 என்றவாறு புள்ளிகளைப் பெற்று, இறுதியில், 30-25 என்ற புள்ளிகள் அடிப்படையில், போட்டியை வென்று சம்பியனாகியது.
இறுதிப் போட்டியின் சிறந்த வீராங்கனையாக, அராலி சரஸ்வதி அணியின் முத்தழகன் பாலசுமதி தெரிவுசெய்யப்பட்டார்.
அராலி சரஸ்வதி அணியின் பயிற்றுநராக, ரவீந்திரன் ஸ்ரீரமணன் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
21 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
5 hours ago