Editorial / 2017 ஜூன் 05 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

- சந்துன் கொடிதுவக்கு
கழகங்களுக்கிடையிலான, ஏழு பேரைக் கொண்ட பெண்களுக்கான றக்பி தொடரில், இராணுவ விளையாட்டுக் கழகத்தின் பெண்கள் அணி சம்பியனாகியுள்ளது.
ஹவலொக் மைதானத்தில், நேற்று (04) இடம்பெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், கடற்படை விளையாட்டுக் கழக அணியை, 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தே, இராணுவ விளையாட்டுக் கழகத்தின் அணி சம்பியனாகியிருந்தது.
இத்தொடரின் சிறந்த வீராங்கனையாக, இராணுவ விளையாட்டுக் கழகத்தின் ஆயிஷா பெரேரா தெரிவானார்.
குறித்த இறுதிப் போட்டிக்கு, இலங்கை றக்பி சம்மேளனத்தின் உபதலைவர் லசித குணரட்ன, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.
இலங்கை றக்பி சம்மேளத்தினால் ஒழுங்கமைப்பட்ட இத்தொடரில் 10 அணிகள் கலந்துகொண்டிருந்தன.
வீராங்கனைகளுக்கு மேலும் போட்டி அனுபவத்தை வழங்குவதுடன், ஆசியத் தொடருக்கான பெண்களின் தேசிய குழாமை தெரிவுசெய்வதே, இத்தொடரின் பிரதான நோக்கமாக இருந்ததாக, பெண்களின் றக்பி வளர்ச்சிக்கான தலைவர் கேணல் தம்மிக குணசேகர தெரிவித்தார்.
இத்தொடரின் பிளேட் சம்பியன்களாக, சி.ஆர் அன்ட் எப்.சி ஏ அணியை, 20-0 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்த விமானப்படை விளையாட்டுக் கழகம் தெரிவாகியிருந்தது.
இத்தொடரின் போல் சம்பியன்களாக, சி.ஆர் அன்ட் எப்.சி பி அணியை, 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்த தெற்கு ஆர்.எப்.சி அணி தெரிவாகியிருந்தது.
இத்தொடரின் ஷீல்ட் சம்பியன்களாக, சப்ரகமுவ ஆர்.எப்.சி அணியை, 10-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்த யு.எச்.ஏ ஆர்.எப்.சி தெரிவாகியிருந்தது.
37 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
3 hours ago