Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 ஜூன் 03 , பி.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருநெல்வேலி கலாமன்ற சனசமூக நிலையத்தின் 71ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கலாமன்ற சனசமூக நிலையமும், கலாமன்ற விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்திய மாபெரும் மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
திருநெல்வே௶லி கலாமன்ற சனமூக நிலைய தலைவர் இ. பகீரதன் தலைமையில், திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலய மைதானத்தில், நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் கொட்டடி இளங்கதிர் விளையாட்டுக் கழகத்தை வென்றே கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொலின்ஸ் விளையாட்டுக் கழகம், ஆறு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், துவாரகன் 17 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு, 59 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இளங்கதிர் விளையாட்டு கழகம் ஆறு ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 55 ஓட்டங்களைப் பெற்று மூன்று ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
சம்பியனான கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு வெற்றிக் கேடயமும், 20,000 ரூபாய் பணப்பரிசிலும் வழங்கப்பட்டதோடு, இரண்டாமிடம் பெற்ற இளங்கதிர் விளையாட்டுக் கழகத்துக்கு இரண்டாமிடத்துக்கான வெற்றிக் கேடயமும், 10,000 ரூபாய் பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.
முன்னதாக கலாமன்ற திருநெல்வேலி கலாமன்ற விளையாட்டுக் கழகத்துக்கும், பி.பி.கே பார்ட்னர்ஷிப் அணிக்குமிடையிலான காட்சிப் போட்டியொன்று இடம்பெற்றிருந்த நிலையில், அதில் பி.பி.கே பார்ட்னர்ஷிப் அணி வென்றிருந்தது.
இந்ந இறுதிப் போட்டியில், பிரதம விருந்தினராக திருநெல்வேலி கலாமன்ற சனமூக நிலையத்தின் போசகர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக, ந. ஆறுமுகதாஸ் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினர்களாக, முத்துத்தம்பி மகா வித்தியாலய அதிபர் இ. பசுபதீஸ்வரன், நல்லூர் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் க. மயூரன், ஜே/ 114 கிராம சேவையாளர் ம. வசந்தரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago