2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சம்பியனானது லிவர்பூல்

Mayu   / 2023 டிசெம்பர் 28 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் விம்பிள்டன் கழகத்தின் முன்னாள் வீரர் மர்ஹூம் ஜனாப் ஞாபகார்த்தமாக புத்தளம்
நகரில் நடைபெற்ற கால்பந்தாட்டத் தொடரில் புத்தளம் லிவர்பூல் கழகம் சம்பியனானது.

லெஜன்ட்ஸ் கழகத்தின் பூரண அனுசரனையில் நடைபெற்ற புத்தளம் கால்பந்தாட்ட லீக்கில்
அங்கம் வகிக்கும் 12 அணிகளுக்கு இடையிலான அணிக்கு ஒன்பது பேர் கொண் இத்தொடரின்
இறுதிப் போட்டியானது புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றபோது
யுனைட்டெட் அணியை பெனால்டியில் வென்றே லிவர்பூல் சம்பியனானது.

இறுதிப் போட்டியின் வழமையான நேர முடிவில் இரண்டு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில்
சமநிலையில் இருந்த நிலையில், பெனால்டியில் 3-2 என்ற ரீதியில் வென்றே லிவர்பூல்
சம்பியனானது.

இத்தொடரின் சிறந்த கோல் காப்பாளராக போல்டனின் முனாசிர் தெரிவானதோடு, சிறந்த வீரராக
லிவர்பூலின் பவாஸ் தெரிவானார்.

புத்தளம் கால்பந்தாட்ட லீக்கில் அஙகம் வகிக்கும் 12 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் வெற்றி பெற்ற நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறின. 

முதலாவது அரையிறுதிப் போட்டியில் த்ரீ ஸ்டாரை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று
லிவர்பூலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் போல்டனை 1-0 என்ற கோல் கணக்கில்
வென்று யுனைட்டெட்டும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X