Shanmugan Murugavel / 2016 ஜூலை 14 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில் அறுகம்பை பகுதியினை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் அறுகம்பே அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாடில் சர்வதேச அளவிலான நெடுந்தூர ஓட்டம் (மரதன்), நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெறவுள்ளதாக அறுகம்பே அபிவிருத்தி அமைப்பின் தலைவர் எம்.எச்.எம். ஜமாஹிம் தெரிவித்தார்.
இது தொடர்பாக பொத்துவில் அறுகம்பே ஹொட்டலில் புதன்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். கல்விக்காக ஓடுவோம் எனும் தொனிப் பொருளில் இடம்பெறவுள்ள மரதன் ஓட்டப் போட்டியின் ஊடாக இப்பிரதேசத்தின் கல்வியை அபிவிருத்தி செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு சர்வதேச மற்றும் தேசிய ரீதியில், சுமார் 60க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதில் கலந்து கொள்பவர்கள் மருத்துவ பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதற் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 20 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளதகவும், இவை தவிர, ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாகவும் தலைவர் எம்.எச்.எம். ஜமாஹிம் மேலும் தெரிவித்தார்.
இப்போட்டியில், தேசிய கிரிகெட் வீரர்களான தம்மிக்க பிரசாத், சாமர கப்புகெதர, ஜெப்ரி வன்டர்ஸே ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
2 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago