2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சாதித்த சானுயாவை கௌரவிக்கும் நிகழ்வு

Freelancer   / 2023 ஜூன் 28 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சுப்ரமணியம் பாஸ்கரன்

சர்வதேச சம்பியன் கராத்தே தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை  தவராசா சானுயாவை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரனால் கௌரவித்து ஊக்கப்படுத்தும் நிகழ்வானது மாவட்டச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது சானுயாவுக்கு றூபவதி கேதீஸ்வரன் பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தொடர்ந்து உதவி மாவட்டச் செயலர் திருமதி ஈ. சத்தியஜீவிதா மாலை அணிவித்ததையடுத்து மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிறிமோகனன் நினைவுக்  கேடயத்தை வழங்கி மதிப்பளித்திருந்தார்.

மேலும் சானுயாவை வரவேற்கும் நிகழ்வு நே கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்தது. இதன்போது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் றூபவதி கேதீஸ்வரனிடம் ஆசியைப் பெற்றதுடன், தொடர்ந்து மாகாதேவா ஆச்சிரமம் முன்றலில் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .