Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 09 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ.தி. பெருமாள்
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை (11) காலை 9 மணிக்கு கொட்டகலை பொது விளையாட்டு மைதானத்தில் 40 குழுக்கள் பங்கு கொள்ளும் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை (12) மாலையில் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது.
முதன் முதலாக நடத்தப்படும் கொட்டகலை “பிரதேச சபைத் தலைவர் சவால் கிண்ணம்” கிரிக்கெட் தொடரில் பிரதேச சபைக்குட்பட்ட 10 வட்டாரங்களிலுமிருந்து தலா 4 குழுக்கள் வீதம் மொத்தமாக 40 குழுக்கள் பங்கு பற்றவுள்ளன. முதலாவது பரிசாக சவால் கிண்ணத்துடன் 2 இலட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக வெற்றிக் கிண்ணத்துடன் ஒரு இலட்சம் ரூபாயுமாக பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
கொட்டகலை பிரதேச சபை வரலாற்றில் முதன் முறையாக நடத்தப்படும் “தலைவர் சவால் கிண்ணம்” கிரிக்கெட் சுற்றுப் போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்துவதற்கும், எதிர்காலத்தில் யார் பதவிக்கு வந்தாலும் இடை நிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
6 minute ago
25 minute ago
36 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
25 minute ago
36 minute ago
42 minute ago