2025 மே 15, வியாழக்கிழமை

ஜெயக்குமாருக்கு வெண்கலப் பதக்கம்

Freelancer   / 2023 நவம்பர் 14 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பிலிப்பைன்ஸில் நடைபெற்று வரும் ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுநர் விளையாட்டு விழாவில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் விளையாட்டு பயிற்றுநரான மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடைமையாற்றும் ப. ஜெயக்குமார், 56- 59 வயதுப் பிரிவில் கோலூன்றிப் பாய்தலில் 2.30 மீற்றர் உயரத்தை தாண்டி வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டுள்ளார்.

ஜெயக்குமா, இவ்விளையாட்டு விழாவில் 100 மீற்றர் ஓட்டம் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளிலும் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தனது இளமைக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகச் சிறந்த ஒரு தடகள சம்பியனாக ஜெயக்குமார் பிரகாசித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .